டி.ஆர். பாட... மோடி டிரம்ஸ் வாசிக்க... டண்டணக்கா... ஏ டணக்குணக்கா...!
சென்னை: தான்சானியா நாட்டில் மோடி டிரம்ஸ் வாசித்த காட்சிகளுக்கு, இயக்குநரும், நடிகருமான விஜய. டி.ராஜேந்தர் வாயால் வடை சுடுவது அதாவது இசையமைப்பது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
4 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு, தான்சானியா நாட்டில் அந்நாட்டின் பிரதமர் காசிம் மஜாலிவா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மோடியும், அந்நாட்டு அதிபருடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தார். இந்த வீடியோ ஏற்கனவே இணையத்தில் பரவி வந்தது.
இந்நிலையில், இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையாளரான விஜய.டி.ராஜேந்தர் முன்பொரு பேட்டியில் தன் வாயாலேயே டிரம்ஸ் வாசிப்பது போன்ற இசையை இசைத்துக் காட்டியிருந்தார்.
தற்போது அதனையும், மோடி டிரம்ஸ் வாசித்த காட்சியையும் இணைத்து குறும்புக்கார நெட்டிசன்கள் புதிய வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற போது, அங்கும் மோடி டிரம்ஸ் வாசித்தார். அப்போதும் இதேபோல் ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய வீடியோவை பார்த்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்கள்...!
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி!












Click it and Unblock the Notifications