முதல் முறையாக பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியாவின் துணைத் தலைவராக டி.சிவா தேர்வு!

Subscribe to Oneindia Tamil

திரையுலகம் சார்ந்த அகில இந்திய கூட்டமைப்பாக மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் 'பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா' (மும்பை) அமைப்பின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில்​ ​'பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா 'வின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தலில் தலைவராக டி.பி.அகர்வாலும், செயலாளராக ரவி கொட்டாரக்கராவும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

T Siva elected as Vice President of All India Film Federation

துணைத்தலைவராக தமிழ்த் தயாரிப்பாளர் டி.சிவா போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஒருவர் 'பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா' வில் பிரதிநிதித்துவம் பெற்று பங்கேற்கும் வகையில் தயாரிப்பாளர் டி.சிவா இப்பொறுப்புக்குப் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இவர் தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக​ ​30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.
இவை மட்டுமல்ல... பிலிம் சேம்பர் என அழைக்கப்படும் 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை'க்கு 2011​-​201​2​-ல் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவர்.

இவர் ஏற்கெனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 2011-2013-ல் துணைத் தலைவராகவும்,2013-2014-ல் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர். இப்போது 2015-​ 16​ல்​ ​செயலாளராகவும் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+