தாசில்தாருக்கும், பெண் தலையாரிக்கும் கள்ளக்காதல்.. சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாசில்தாராக பணியாற்றிய முருகன் என்பவருக்கும் தலையாரி ராமலட்சுமி என்ற தலையாரிக்கும் இடையே கள்ளக்காதல் மூண்டு இருவரும் குடும்பமும் நடத்தி வந்த விவகாரம் வெளியில் தெரிந்து தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tahsildar suspended for illicit love

பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ராமலட்சுமி. இவர் தலையாரியாக இருந்து வருகிறார். இவருக்கு வீடு பாளையங்கோட்டையில் உள்ளது. திருமணம் ஆனவர்தான். ஆனால் கணவரை விட்டுப் பிரிந்து வசித்து வருகிறார். இவருக்கும் முருகனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது பின்னர் கள்ளத் தொடர்பாக மாறியது.

இருவரும் கணவன் மனைவி போல பழகத் தொடங்கினர். ராமலட்சுமியிடம் உருகிப் போன முருகன், அவருக்கு ரூ. 20 லட்சம் செலவில் பாளையங்கோட்டையில் "தாஜ்மஹாலும்" கட்டி கொடுத்து உள்ளார். ஆனால் அங்கு வந்து போவதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது போலத் தெரிகிறது. இதையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்பு ராமலட்சுமியை தனது வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார் முருகன்.

இந்நிலையில் ராமலட்சுமியை காணவில்லை என்று அவரது உறவினர்கள் தேட அவர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தாசில்தார் கட்டி கொடுத்த வீட்டை அடித்து உடைத்து சூறையாடினர். தாசில்தாருக்கு சொந்த ஊரான நெல்லை ஜங்ஷன் வீட்டுக்கு போய் தேடி பார்த்து உள்ளனர் அங்கேயும் அவரை காணவில்லை. ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அவரது வீட்டையும் தாக்கி சேதப்படுத்தினர்.

இறுதியாக ராதாபுரம் தாசில்தார் குவார்ட்டர்ஸுக்கு வந்து பார்த்த போது அங்கு ராமலட்சுமியும், முருகனும்.. இருந்துள்ளனர். அதைப் பார்த்து உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். தாசில்தாருக்கும் ராமலட்சுமி உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால் மக்கள் கூடி விட்டனர்.

தகவல் தாசில்தாரின் மனைவி மாரியம்மாளுக்குப் பறந்தது. கொதிப்படைந்த அவர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்குப் புகார் கொடுத்தார். அவர் விசாரணை நடத்தி முருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

உஷார் பார்ட்டியாமே....?

முருகன் குறித்து பல குண்டக்க மண்டக் தகவல்கள் உலா வருகின்றன. ராதாபுரத்திலேயே அவர் பல பெண்களுடன் ரகசியத் தொடர்பு வைத்திருப்பதாக கூறுகிறாரக்ள். உதவி கேட்டு வரும் ஏழைப் பெண்களைத்தான் அவர் குறி வைப்பாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+