மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க இதை, இதை எல்லாம் தான் செய்யக் கூடாது
சென்னை: மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மின் விபத்துகளை தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அருள்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மின்கசிவு தடுப்பானை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் சுவிட்சு போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்க வேண்டும். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்ற வேண்டும்.

டிவி ஆண்டனா
பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். டி.வி. ஆண்டனாவை வீட்டின் அருகே செல்லும் மின் கம்பிகளுக்கு அருகில் கட்டாதீர்கள். டி.வி. ஆண்டனாவின் வயரை மின் கம்பத்தில் கட்ட வேண்டாம். கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது. ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும், சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

வயரிங்
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் வயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ள வேண்டும். மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள கம்பி மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. சுவற்றின் உட்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி. வைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம்.

மின் கம்பங்கள்
மின் கம்பங்களை பந்தல்களாவோ, அதன் மீது விளம்பர பலகைகளையோ கட்டக்கூடாது. மழைகாலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லக் கூடாது. மழையாலும், பெரும் காற்றாலும் அறுந்து விழுந்த மின் கம்பி அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு வீடு கட்ட வேண்டும். மின்வாரிய மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லக் கூடாது.

இடி
மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும். இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்கக் கூடாது. கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு, போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையுங்கள். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக்கூடாது.

மிக்சி
இடி, மின்னலின் போது தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். தஞ்சமடைய அருகில் ஏதும் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. திறந்த வெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications