தாலுகா அலுவலக தற்காலிக பணியாளர் சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை
தென்காசி: தாலுகா அலுவலக தற்காலிக பணியாளர் வீட்டில் சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர்தப்பினர்.
தென்காசி எல்.ஆர்.எஸ்.பாளையம் பகுதியை சார்ந்தவர் சுப்புராஜ் மகன் ஐய்யப்பன். இவர் தென்காசி தாலுகா அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு இவர் தனது குடும்பத்தினரை திருப்பூருக்கு அனுப்பிவிட்டு ஐயப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நள்ளிரவு சுமார் 2.30.மணியளவில் அவரது வீட்டிலிருந்து பயங்கர சப்தம் கேட்டுள்ளது.இந்த சப்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துப் பார்த்துள்ளனர்.
அப்போது வீடு முழுவதும் பயங்கரமாக தீபிடித்து எரிந்துள்ளதைகண்டவர்கள் உடனடியாக போலீசாருக்கும்,தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.விரைந்து வந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றப்போது வீட்டின் மையப்பகுதியில் எரிவாயு சிலிண்டர் தீபிடித்து கொண்டிருந்தது.
ஓட்டுவீடு இடிந்து விழுந்துள்ளது.தீயை அணைத்தவர்கள் இடிபாடுகளுக்கிடையே கருகிய நிலையில் ஐயப்பன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக அவரை நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நெல்லை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயரிழந்தார்.இதுக் குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது அய்யப்பனுக்கு அடிக்கடி வலிப்பு நோய் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.இதுக் குறித்து தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications