41 பேரின் உயிரை நல்லபடியாக காப்பாற்றிய ”புளியமரம்”- பண்ருட்டியில் பரபரப்பு!
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பேருந்து ஒன்றினை விபத்தில் இருந்து தாங்கிப் பிடித்து புளியமரம் ஒன்று காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த போது அங்கிருந்த புளியமரத்தின் கிளை பேருந்தை தாங்கிப் பிடித்ததில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்கவரத்துக் கழக விரைவுப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் சுமார் 41 பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது..
இந்த பேருந்து பண்ருட்டி அருகே உள்ள பனிக்கன்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பெரிய பள்ளத்தில் பாய்ந்தது.
அப்போது, சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் கிளை ஒன்று, பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததால், அதில் சிக்கிக் கொண்ட பேருந்து பள்ளத்தில் விழாமல் தொங்கியபடி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை.
பேருந்தில் இருந்த 41 பேரின் உயிரையும், சாலையோரம் இருந்த புளியமரம்தான் காப்பாற்றியுள்ளது. அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் ஏராளமான உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications