காவிரி விவகாரம் : ஆளுநர் பன்வாரிலாலுடன் விஷால், நாசர் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் சந்திப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுடன் விஷால், நாசர், ஆர்.கே. செல்வமணி தமிழ்த் திரையுலகினர் இன்று சந்தித்தனர்.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழ்த் திரையுலகினர் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பான தங்களது தீர்மானத்தை வழங்கி வலியுறுத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இதுதொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்த் திரையுலகினர் சார்பில் அறவழிப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நடிகர்கள் நாசர், விஷால், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினர். மேலும் இந்த சந்திப்பில், காவிரி விவகாரம் தொடர்பான தீர்மான நகலையும் ஆளுநரிடம் வழங்கினர்.


Click it and Unblock the Notifications
