சினிமாவில் ஹீரோ.. நிஜத்தில் ஜீரோ.. தேர்தலில் தோற்ற ஆக்ஷன் ஹீரோக்கள்
சென்னை: சினிமாவில் ஆக்ஷன் ஹீரோக்களாக ஜொலித்தவர்கள், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்விகளை சந்தித்துள்ளனர்.
கேப்டன் பிரபாகரன், ரமணா, வல்லரசு உள்ளிட்ட பல்வேறு ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த். உளுந்தூர்பேட்டை தொகுதியில், 26950 வாக்குகள் மட்டுமே பெற்று, இவர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

சூரியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக ஜொலித்தவர் சரத்குமார். இவரும் விஜயகாந்த்தை போலவே, ஆக்ஷன் பிளஸ் சென்டிமென்ட் படங்களில் முத்திரை பதித்தவர். இம்முறை, சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில், 62356 வாக்குகளை பெற்று, 88,357 வாக்குகளை பெற்ற திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 26001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அதேநேரம், திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்ட, வாகை சந்திரசேகர், அதிமுக கூட்டணி சார்பில் திருவாடானையில் போட்டியிட்ட கருணாஸ் போன்ற நடிகர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications