கூட்டணிக்கு சிக்னல் கொடுக்கும் வாசன்.. கண்டுகொள்ளாத கார்டன்
சென்னை: ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவதை அவர்களின் செயல்பாடு பட்டவர்த்தனமாக காண்பித்து வருகிறது.
காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியுள்ளார் ஜி.கே.வாசன். கட்சி தொடங்கியது முதலே அதிமுகவுடன் நெருக்கம் காட்டிவருகிறார்.
தமிழக மக்களின் வாழ்வுரிமை தொடர்பான பல பிரச்சினைகளில், அது, அதிமுக அரசோடு சம்மந்தப்பட்டிருந்தால் வெறும் அறிக்கைவிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார் வாசன். மத்திய அரசோடு சம்மந்தப்பட்ட பிரச்சினை என்றால்தான் உக்கிரமாக மாறிவிடுகிறார்.

மீனவர்களுக்காக போராட்டம்
உதாரணத்திற்கு, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே 18ம் தேதி ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா வினர் போராட்டம் நடத்தினர்.

காலம் கடந்தது
ஆனால் பொங்கலுக்கு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பொங்கல் முடிந்த பிறகு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தங்கள் கட்சி உயிர்ப்போடு உள்ளது என்பதை காண்பிக்க நடைபெற்றதை போன்றுதான் இருந்தது என்கிறார்கள் அக்கட்சியிலுள்ள சிலர்.

தமிழக அரசு பற்றி மூச்
தமிழக அரசு வெள்ள சேதத்தை கையாண்ட விதம், மற்றும் நிவாரண முறைகேடு பற்றியெல்லாம், போராடாத வாசன் கட்சி, விடுதலை செய்யப்பட்ட பிறகு, மீனவர் பிரச்சினைக்காக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

காத்திருப்பு
வாசன் தரப்பு என்னதான் சிக்னல் கொடுத்தாலும், கார்டன் தரப்பு இன்னும் கண் அசைக்கவில்லை. எனவே சமத்துவ மக்கள் கட்சி வரிசையில், தமிழ் மாநில காங்கிரசும் காத்திருப்போர் பட்டியலில் இணைந்துள்ளதாக கூறுகிறார்கள் விவரமறிந்தோர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications