கை சின்னத்தில் ஓட்டு போடுங்க.. பிரசாரத்தில் குழப்பிய வாசன்.. அதிர்ந்து பார்த்த பாஜக

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீபெரும்புதூர்: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் தமாகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து இன்று தமகா தலைவர் ஜிகே வாசன் பிரசாரம் செய்தபோது கை சின்னத்தில் ஓட்டு போடுங்கள் எனக்கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியான தொண்டர்கள் அலர்ட் செய்த நிலையில் அவர் ‛கையை நகர்த்தி கொள்ளுங்கள்' எனக்கூற வந்தேன் என்று சமாளித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பதிவாகும் ஓட்டுகள் 45 நாட்கள் கழித்து ஜுன் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Tamil Manila Congress president GK Vasan asks vote for Hand symbol instead of Bicycle

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி என்பது உள்ளது. இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் உள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் (தமகா) கட்சிக்கு மொத்தம் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமகா ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறது. ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால், தூத்துக்குடியில் எஸ்டிஆர் விஜயசீலன் ஆகியோர் தமாக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் 3 பேரும் பாஜக கூட்டணியில் இருந்தாலும் தமகாவின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தான் ஜிகே வாசன் தமகா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இன்று ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் தமகா வேட்பாளர் வேணுகோபலை ஆதரித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட மாங்காட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பல் ஈடுபட்டார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ஜிகே வாசன், சைக்கிள் சின்னத்துக்கு பதில் கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார். அதாவது, திறந்த வாகனத்தில் வேட்பாளர் வேணுகோபால் அருகே நிற்க மைக்கில் ஜிகே வாசன் பேசினார். அப்போது, ஜிகே வாசன் தனது கையில் வைத்திருந்த சிறிய வடிவிலான சைக்கிளை எடுத்து மக்களிடம் காட்டியதோடு,‛‛வேணுகோபாலுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்திலேயே'' என வாக்கு சேகரித்தார்.

இந்த வேளையில் அங்கிருந்தவர்கள் கை சின்னம் அல்ல. சைக்கிள் சின்னம் என கூறினர். இதையடுத்து தவறை உணர்ந்த ஜிகே வாசன் சமாளித்தார். அதாவது, ‛‛ஒரு நிமிடம் நிமிடம்.. வரனே்.. வரேன்.. கையை நகர்த்தி கொள்ளுங்கள்'' எனக்கூறினேன் என்று தெரிவித்து சமாளித்தார். அதன்பிறகு ‛‛வேணுகோபாலுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்'' என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த தமகா, பாஜக, பாமக நிர்வாகிகள் அதிர்ந்து போயினர். இதற்கிடையே ஜிகே வாசன் சின்னம் மாறி ஓட்டு கேட்டு சமாளித்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+