நடிகர் சங்கத்தின் பெயரை மற்றக் கோரி தமிழ் அமைப்புக்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று கோரி சென்னையில் இன்று தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலை கண்டிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், நடிகர் சங்கத்தின் தலைமை பொறுப்புக்கு தமிழரே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் தமிழர் நடுவம் சார்பாக பல தமிழ் அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்தின.
தமிழர் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட தமிழ்த்தேசியகூட்டமைப்பை சேர்ந்தவர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களை கைது செய்து மண்டபத்தில் காவலில் வைத்துள்ளது காவல்துறை.












Click it and Unblock the Notifications