ஜெ. மீண்டும் முதல்வரான பின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் ... ஆக. 24ல் தொடங்குகிறது
சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் வரும் 24-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 25-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. அப்போது முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார்.
சட்டசபையில் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மானியக் கோரிக்கை விவாதம்..
பொதுவாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்து கொள்ளப்படுவது வழக்கம். இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விரிவாக பதிலளித்து பேசுவார். சுமார் 1 மாதம் இந்த கூட்டம் நடைபெறும். ஆனால் கடந்த மார்ச் மாததத்துக்குப் பின்னர் சட்டசபை கூட்டம் கூட்டப்படவே இல்லை.

மே மாத எதிர்பார்ப்பு
இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலையான ஜெயலலிதா, மே 23-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். அப்போது உடனடியாக சட்டசபை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டப்படவில்லை.

ஆர்.கே.நகர் தேர்தல்
இதன் பின்னர் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். இதனைத் தொடர்ந்தும் சட்டசபை கூட்டப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சட்டசபை கூட்டப்படவில்லை.

40 நாட்களாகியும்..
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவடைந்து 40 நாட்களுக்கு மேலாகியும் சட்டசபையை கூட்டாதது ஏன்? மானியக் கோரிக்கைகள் என்னவாயிற்று? எப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும்? என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வந்தன.

ஹைகோர்ட்டில் உறுதிமொழி
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மலிவுவாக்கம் கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கை ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டசபை கூடுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆக. 24-ல் கூடுகிறது
இந்நிலையில் இன்று சட்டசபை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 24-ந் தேதியன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications