முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டிய முதல் சட்டசபை கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
சென்னை: மூன்று நாட்கள் நடந்த தமிழக சட்டசபைக் கூட்டம் திங்கட்கிழமை பிற்பகலுடன் முடிவடைந்தது. மீண்டும் கூடுவது குறித்த மறுதேதி குறிப்பிடப்படாமல் இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றபின்னர் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
முதல்நாளில் இருந்தே எதிர்கட்சியினரின் வெளிநடப்பு, அமளி, கூச்சல் குழப்பம் என களை கட்டியது.

திமுக தலைவர் கருணாநிதி தனக்கு வசதியான இடம் ஒதுக்கப்படவில்லை என்று கூறி வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் ரகசியமாக வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வருக்கான நாற்காலியில் அமராமலேயே கூட்டத்தொடரை நடத்தினார். எதிர்கட்சியினரின் சராமரி கேள்விகளுக்கு விளக்கங்களும் அளித்தார். மூன்று நாட்களில் இரண்டு நாட்கள் திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
ஒருவழியாக 3 நாள் நடைபெற்ற கூட்டம் இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது.
இத்தனை அமளிக்கிடையேயும் முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு தொடர்பான தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேறின. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட 7 மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications