தமிழக சட்டசபையில் வரும் 25-ந் தேதி பட்ஜெட் தாக்கல்! ஓ.பி.எஸ். தாக்கல் செய்கிறார்!!
சென்னை: தமிழக சட்டசபையில் வரும் 25-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக சட்டசபை ஆளுநர் ரோசய்யா உரையுடன் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 4 நாட்கள் மட்டுமே அக்கூட்டத் தொடர் நடைபெற்றது.

அதன் பின்னர் அண்மையில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசித்தது. இருப்பினும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் வரும் 25-ந் தேதி முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:
2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2015-2016-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் , 2014-2015-ஆம் ஆண்டிற்கான இறுதித் துணை நிதிநிலை அறிக்கை ஆகியவை இந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
தமிழ்நாடு சட்டசபை விதி 181(1)-ன்கீழ், 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி புதன்கிழமை அன்று தாக்கல் ஆகும்.
2015-2016-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 2015-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் நாள் சனிக்கிழமை அன்று முன்வைக்கப்படுகின்றன.
2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி காலை 10.00 மணிக்கு பேரவைக்கு கிடைக்கும்.
இவ்வாறு ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications