இன்று நடந்தது ஓ.பி.எஸ்.தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம்?
ஓ பன்னீர்செல்வம் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இது ஓபிஎஸ் தலைமையிலான கடைசி கேபினட் கூட்டம் என கூறப்படுகிறது.
சென்னை: போயஸ் தோட்டத்தில் மன்னார்குடி கோஷ்டியிடம் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பன்னீர்செல்வம் கொடுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம் இதுவாக இருக்கலாம் என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து மத்திய அரசின் விருப்பத்தின் பேரில் தமிழக முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக அவரை படாதபாடுபடுத்திவிட்டது மன்னார்குடி கோஷ்டி.
ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவியை அபகரிக்க மன்னார்குடி கோஷ்டி போட்ட சதித் திட்டங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா தற்போது முதல்வர் பதவியை கபளீகரம் செய்யப் போகிறார்.

ராஜினாமா கடிதம்
இதற்காக ஓ. பன்னீர்செல்வத்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை சில நாட்களுக்கு வாங்கிவிட்டனராம். இந்த நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென படுவேகமாக இயங்கி வருகிறார். விவசாயிகள் தற்கொலை தொடர்பாக உயர்நிலைக் குழு ஆய்வு செய்யும் என அறிவித்திருக்கிறார்.

அடுத்தடுத்து...
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி நாளைய மறியல் போராட்டத்தை கைவிட செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் கொடுத்திருக்கிறார். இன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார்

2-வது அமைச்சரவை கூட்டம்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டிய 2-வது அமைச்சரவை கூட்டம் இது. இக்கூட்டத்தில் வறட்சி நிலவரம், ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

கடைசி அமைச்சரவை கூட்டம்?
ஏற்கனவே சசிகலா வரும் 10 அல்லது 12-ந் தேதி முதல்வராக கூடும் எனக் கூறப்பட்டு வருகிறது. ஆகையால் ஓ. பன்னீர்செல்வம் இன்று கூட்டியதுதான் அவரது கடைசி அமைச்சரவை கூட்டமாக இருக்கலாம் என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications