கே.வி.ராமலிங்கம் 'டிஸ்மிஸ்'- ஆர்.பி. உதயக்குமார் மீண்டும் அமைச்சரானார்!
Subscribe to Oneindia Tamil

மேலும், சில காலத்திற்கு முன்பு அமைச்சர் பதவியை இழந்த ஆர்.பி. உதயக்குமார் மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
ஆர்.பி. உதயக்குமாருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் 11ம் தேதி காலை 9.45 மணிக்கு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 பேரின் பொறுப்புகள் மாற்றம்
இதேபோல அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு வருவாய்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்.சி.சம்பத்துக்கு வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தோப்பு வெங்கடாசலத்திடம்தான், கே.வி.ராமலிங்கத்திடமிருந்து பறிக்கப்பட்ட ஈரோடு நகர் அதிமுக செயலாளர் பொறுப்பை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications