மக்களின் அன்றாட தேவைகளை தீர்க்க முடியாமல் திண்டாடும் தமிழக அரசு - வானதி சீனிவாசன்
வேலூர்: தமிழக அரசு மக்களின் அன்றாட தேவைகளை தீர்க்க முடியாமல் தமிழக அரசு திண்டாடி வருகின்றது என்று பாஜகவின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் காந்தி நகரில் பா.ஜ.க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநில துணைத் தலைவரும், வேலூர் கோட்ட பொறுப்பாளருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாஜகவில் புதிய உறுப்பினர்களாக 60 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஒன்றியங்கள், நகரங்கள், கிராமங்கள் தோறும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தீவிரமாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை கையாண்ட விதத்தில் அது தெரிகிறது. மக்கள் அமைதியான முறையில், மனதில் கொதிப்போடு இருக்கின்றனர்.
அமைச்சர்கள் மிக தீவிரமாக மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட திட்டங்கள் அல்லது பிரச்சினைகளுக்கு தெளிவான பார்வையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் இல்லை.
தமிழ்நாட்டில் திட்டங்களை தொடங்க வெளிநாட்டு முதலீடுகளை பெற தமிழக அரசு திட்டமிடுவதாக கூறுகின்றனர். ஆனால் அதற்கான எந்த வேலைகளும் நடைபெறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications