சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப்பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது.

நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி
இந்நிலையில் சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே அதே இடத்தில் நீடிப்பதாக அவர் கூறினார்.

மிக கனமழை பெய்யும்
இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று அவர் கூறினார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம். தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிகக் கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

புதுச்சேரியிலும் கனமழை
தமிழகத்தின் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியிலும் கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகளவாக 9 சென்டி மீட்டர்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் ஆனைக்காரசத்திரத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் சீர்காழி 7 சென்டி மீட்டரும், மீனம்பாக்கம், காரைக்கால் தலா 5 சென்டி மீட்டரும் திருத்தணி, செங்கல்பட்டு தலா 2 சென்டி மீட்டரும் செங்குன்றம், தாம்பரம், சாத்தான்குளத்தில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
-
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications