கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளுக்கு பள்ளிகளில் முன்னுரிமை கொடுங்கள் - துணைமுதல்வரிடம் மனு
தமிழகத் துணை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
சென்னை: கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை 3 முதல் 10 வகுப்பு வரை கொண்டு வருவதாக அரசின் கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளதற்கு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரை கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
முக்கிய கோரிக்கைகள்
1) அண்டை மாநிலங்களில் உள்ளது போல், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆறாவது கட்டாயப் பாடமாக பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
3) கணினி இன்றியமையாத இன்றைய சூழலில் தொடக்க (1-5), நடுநிலை (6-8), உயர்நிலை (9-10), மேல்நிலை (11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்திட வேண்டும்.
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால், தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவதுடன், கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர்.
கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக நீண்ட வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்வாதாரக் கோரிக்கைகளை தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications