வாக்கு எண்ணிக்கை மையத்தில் விஜய் படமா! தவெக நிர்வாகியை வெளியே அனுப்பிய போலீஸ்
நாகப்பட்டினம்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த நாடுமே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆளுங்கட்சியாக திமுக தொடருமா இல்லை, அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் தமிழ்நாட்டை ஆளும் என்ற எதிர்பார்த்து எழுந்துள்ளது.
புதிய வரவாக தேர்தலில் குதித்துள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தாக்கத்தை உண்டாக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் மொத்தம் 62 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை பணியில் 10 ஆயிரத்து 545 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு கட்சிகளின் முகவர்களும் உள்ளே சென்று தங்களது பணியை தீவிரமாக மேற்கொள்ள இருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் எந்த ஒரு கட்சியின் கொடி மற்றும் கட்சி துண்டு ஆகியவை அணிந்து செல்ல கூடாது.மொபைல், சிகரெட் போன்ற எந்த ஒரு பொருட்களையும் உள்ளே எடுத்து செல்லக்கூடாது என பல்வேறு அறிவுறுத்தல்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் நாகை வாக்கு எண்ணும் மையத்தில் தவெக நிர்வாகி ஒருவர் விஜயின் உருவம் பொறித்த சட்டையை அணிந்து உள்ளே சென்றார். இதனை தடுத்த போலீசார் இதற்கு அனுமதி இல்லை என்றும் தங்களது சட்டையை உடனடியாக மாற்றிக் கொண்டு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். முதலில் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தவெக நிர்வாகி பின்னர் அங்கிருந்து வெளியேறி தனது ஆடையை மாற்றுவதற்காக சென்று உள்ளார்.
முதல் தேர்தலை தவெக வினர் சந்தித்து இருக்கிறார்கள். ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்ற போது என்ன நடைமுறை என்று தவெக பூத் ஏஜெண்டுகளுக்கு தெரியாமல் தடுமாறிய பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆன நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நாளிலும் தவெகவினர் விதியை மீறி விஜய் புகைப்படத்துடன் வந்தது குறிப்பிடத்தக்கது.
-
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications