டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயி சுப்ரமணியன் என்பவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் முதலிய கோரிக்கைகளை ,மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 9வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செருப்பு, துடைப்பத்தால் அடித்துக்கொண்டும், மொட்டை அடித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலையில் தமிழக விவசாயி சுப்ரமணியன் என்பவர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உடனடியாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார்.
கடந்த மே மாதம் விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய போது விவசாயிகளில் இருவர், அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற வளாகத்தில் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தியதும் நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications