சென்னை: தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே ஆட்சியை தொடர முடியும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் உடனடியாக விஜய் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இதனால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக அரசியலில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாம்.
May 13, 2026, 10:27 am IST
மது இல்லா தமிழகம் தான் மகளிரின் எதிர்பார்ப்பு. ஒரு கடையை மூடினால் 4 கடைகள் திறக்கப்படுகிறது. அப்படி இருந்தால் தான் தமிழ் இளைஞர்களை காக்க முடியும் – பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி
May 13, 2026, 10:27 am IST
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும். தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும். இதுதான் பாமகவின் நோக்கம். தவெகவும் அதுபோன்ற வாக்குறுதிகளை தான்அளித்தது – பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி
May 13, 2026, 10:24 am IST
யாருக்கும் ஆதரவில்லை – நடுநிலை வகிக்கும் பாஜக
பாஜக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. நடுநிலை வகிக்க உள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்
May 13, 2026, 10:18 am IST
விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு பிரேமலதா எதிர்ப்பு
விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கவில்லை.
May 13, 2026, 10:16 am IST
மனவேதனையுடன் சொல்கிறேன். இங்கு குதிரை பேரம் நடந்ததாக சொல்கின்றனர். அதுபற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து மனம் வருந்துகிறேன் – தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா
May 13, 2026, 10:15 am IST
விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியின் தேமுதிகு எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பேசுகிறார்.
May 13, 2026, 10:10 am IST
முதல்வர் விஜய் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் – இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன் அறிவிப்பு
May 13, 2026, 10:06 am IST
அமமுகவில் நீக்கப்பட்ட எம்எல்ஏ விஜய்க்கு ஆதரவு
டிடிவி தினகரனின் அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு. விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் காமராஜ் எம்எல்ஏ நேற்று அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று ஆதரவு தெரிவித்து பேச்சு.
May 13, 2026, 10:04 am IST
திமுக ஆட்சி கொண்டு வந்த மக்கள் நல திட்டங்கள் தொடர வேண்டும். இன்றயை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற இருக்கும் முதல்வர் விஜய்க்கு நான் சார்ந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் – பாபநாசம் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான்
May 13, 2026, 9:58 am IST
இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்யின் அரசுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு வழங்குகிறது. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு வழங்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது – ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான்.
May 13, 2026, 9:54 am IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் நம் முதலமைச்சர் (விஜய்) கல்வி, வேலைவாய்ப்பு உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் இடத்தில் நீடிக்க செய்ய வேண்டும் – விசிக எம்எல்ஏ வன்னியரசு
May 13, 2026, 9:52 am IST
ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். ஜோதிட நம்பிக்கைகளுக்கு அரசு இடம் கொடுக்க கூடாது – விசிக எம்எல்ஏ வன்னியரசு
May 13, 2026, 9:51 am IST
விஜய் தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என நம்புகிறேன். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் – விசிக எம்எல்ஏ வன்னியரசு
May 13, 2026, 9:46 am IST
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு - வன்னியரசு எம்எல்ஏ
May 13, 2026, 9:43 am IST
விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
May 13, 2026, 9:42 am IST
ராகுல் காந்தியின் வழிகாட்டுதல் படி அரசுக்கு உறுதுணையாக இருப்போம் – காங்கிரஸ்
May 13, 2026, 9:40 am IST
நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர்.
May 13, 2026, 9:35 am IST
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் ஆதரவு
May 13, 2026, 9:33 am IST
முதல்வர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கோரினார்.
May 13, 2026, 9:26 am IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு ஆதரவு என்று அதிமுக எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி அறிவிப்பு
May 13, 2026, 9:24 am IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வருகை தந்தனர்.
#WATCH | Chennai | Leader of Opposition in Tamil Nadu Assembly, Udhayanidhi Stalin, along with DMK MLAs, arrives at the Assembly, as TVK to face floor test today pic.twitter.com/uk0776F3nK
மெஜாரிட்டி நம்பர் மாற்றம்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெல்வாரா? எத்தனை எம்எல்ஏக்கள் வேண்டும்
May 13, 2026, 8:49 am IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் இருந்து காரில் தமிழக சட்டசபைக்கு புறப்பட்டார்.
#WATCH | Chennai, Tamil Nadu: AIADMK General Secretary Edappadi K Palaniswami leaves from his residence for the Legislative Assembly.
Chief Minister and TVK Chief C Joseph Vijay is set to face his first trust vote in the Tamil Nadu Legislative Assembly today. pic.twitter.com/XichkXRE53
அதிமுக எம்எல்ஏக்கள் 2 குழுவாக பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு குழுவாகவும், சிவி சண்முகம் தலைமையில் இன்னொரு குழுவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சிவி சண்முகத்தின் இல்லத்திற்கு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வருகை புரிந்து வருகின்றனர்.
VIDEO | Chennai: AIADMK MLAs arrive at party MLA CVe Shanmugam’s residence in MRC Nagar.
சட்டசபையில் இன்று மெஜாரிட்டிக்கு 117 எம்எல்ஏக்கள் வேண்டும் என்றாலும் கூட இதன் எண்ணிக்கை மாறுபடலாம். ஏனென்றால் இன்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் வராமல் இருக்கலாம். இவர்கள் வராவிட்டால் சபையில் இருக்கும் எம்எல்ஏக்களில் 50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தாலே விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று விடுவார்.
May 13, 2026, 7:57 am IST
விஜய்க்கு, அதிமுகவின் சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியை சேர்ந்த எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அந்த அணியில் மொத்தம் 30 எம்எல்ஏக்கள் வரை உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களின் ஆதரவு இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
May 13, 2026, 7:54 am IST
சட்டசபையில் தவெகவிற்கு தற்போது 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஒருவர் சபாநாயகராக இருக்கிறார். இதனால் எம்எல்ஏக்களின் பலம் 105 ஆக குறைகிறது. அதேபோல் தவெகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட்டின் 2 எம்எல்ஏக்கள், விசிகவின் 2 எம்எல்ஏக்கள், ஐயூஎம்எல் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், அமமுகவில் வென்று தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ என மொத்தம் 119 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதனால் விஜய் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.
READ MORE
7:46 AM, 13 May
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். காலை 9.30 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டு அதன் மீது ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
7:46 AM, 13 May
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மெஜாரிட்டி இல்லை. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவில் விஜய் முதல்வராகி உள்ளார். பிற கட்சிகளின் ஆதரவில் ஆட்சியை பிடித்துள்ளதால் மே 13ம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டார். அதன்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
7:50 AM, 13 May
தமிழக சட்டசபையில் 234 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டியை நிரூபிக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டும். தற்போது விஜய் 2 தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் ஒரு ஓட்டில் திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனை வென்ற தவெகவின் சீனிவாச சேதுபதிக்கு வாக்களிக்க நீதிமன்றம் தடை போட்டுள்ளது. இதனால் 2 எம்எல்ஏக்கள் குறைகிறது. எனவே மெஜாரிட்டி 117ஆக குறைந்துள்ளது.
7:54 AM, 13 May
சட்டசபையில் தவெகவிற்கு தற்போது 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஒருவர் சபாநாயகராக இருக்கிறார். இதனால் எம்எல்ஏக்களின் பலம் 105 ஆக குறைகிறது. அதேபோல் தவெகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட்டின் 2 எம்எல்ஏக்கள், விசிகவின் 2 எம்எல்ஏக்கள், ஐயூஎம்எல் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், அமமுகவில் வென்று தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ என மொத்தம் 119 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதனால் விஜய் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.
7:57 AM, 13 May
விஜய்க்கு, அதிமுகவின் சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியை சேர்ந்த எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அந்த அணியில் மொத்தம் 30 எம்எல்ஏக்கள் வரை உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களின் ஆதரவு இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
7:59 AM, 13 May
சட்டசபையில் இன்று மெஜாரிட்டிக்கு 117 எம்எல்ஏக்கள் வேண்டும் என்றாலும் கூட இதன் எண்ணிக்கை மாறுபடலாம். ஏனென்றால் இன்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் வராமல் இருக்கலாம். இவர்கள் வராவிட்டால் சபையில் இருக்கும் எம்எல்ஏக்களில் 50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தாலே விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று விடுவார்.
8:45 AM, 13 May
அதிமுக எம்எல்ஏக்கள் 2 குழுவாக பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு குழுவாகவும், சிவி சண்முகம் தலைமையில் இன்னொரு குழுவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சிவி சண்முகத்தின் இல்லத்திற்கு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வருகை புரிந்து வருகின்றனர்.
VIDEO | Chennai: AIADMK MLAs arrive at party MLA CVe Shanmugam’s residence in MRC Nagar.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் இருந்து காரில் தமிழக சட்டசபைக்கு புறப்பட்டார்.
#WATCH | Chennai, Tamil Nadu: AIADMK General Secretary Edappadi K Palaniswami leaves from his residence for the Legislative Assembly.
Chief Minister and TVK Chief C Joseph Vijay is set to face his first trust vote in the Tamil Nadu Legislative Assembly today. pic.twitter.com/XichkXRE53
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக தமிழக சட்டசபைக்கு முதல்வர் விஜய் வருகை. தவெகவின் எம்எல்ஏக்களும் தமிழக சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.
9:20 AM, 13 May
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவின் விஜய்க்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொறடா உத்தரவிட்டுள்ளார்.
9:24 AM, 13 May
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வருகை தந்தனர்.
#WATCH | Chennai | Leader of Opposition in Tamil Nadu Assembly, Udhayanidhi Stalin, along with DMK MLAs, arrives at the Assembly, as TVK to face floor test today pic.twitter.com/uk0776F3nK
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு ஆதரவு என்று அதிமுக எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி அறிவிப்பு
9:33 AM, 13 May
முதல்வர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கோரினார்.
9:35 AM, 13 May
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் ஆதரவு
9:40 AM, 13 May
நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர்.
9:42 AM, 13 May
ராகுல் காந்தியின் வழிகாட்டுதல் படி அரசுக்கு உறுதுணையாக இருப்போம் – காங்கிரஸ்
9:43 AM, 13 May
விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
9:46 AM, 13 May
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு - வன்னியரசு எம்எல்ஏ
9:51 AM, 13 May
விஜய் தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என நம்புகிறேன். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் – விசிக எம்எல்ஏ வன்னியரசு
9:52 AM, 13 May
ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். ஜோதிட நம்பிக்கைகளுக்கு அரசு இடம் கொடுக்க கூடாது – விசிக எம்எல்ஏ வன்னியரசு
9:54 AM, 13 May
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் நம் முதலமைச்சர் (விஜய்) கல்வி, வேலைவாய்ப்பு உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் இடத்தில் நீடிக்க செய்ய வேண்டும் – விசிக எம்எல்ஏ வன்னியரசு
9:58 AM, 13 May
இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்யின் அரசுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு வழங்குகிறது. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு வழங்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது – ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான்.
10:04 AM, 13 May
திமுக ஆட்சி கொண்டு வந்த மக்கள் நல திட்டங்கள் தொடர வேண்டும். இன்றயை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற இருக்கும் முதல்வர் விஜய்க்கு நான் சார்ந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் – பாபநாசம் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான்
10:06 AM, 13 May
அமமுகவில் நீக்கப்பட்ட எம்எல்ஏ விஜய்க்கு ஆதரவு
டிடிவி தினகரனின் அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு. விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் காமராஜ் எம்எல்ஏ நேற்று அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று ஆதரவு தெரிவித்து பேச்சு.
10:10 AM, 13 May
முதல்வர் விஜய் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் – இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன் அறிவிப்பு
10:15 AM, 13 May
விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியின் தேமுதிகு எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பேசுகிறார்.
10:16 AM, 13 May
மனவேதனையுடன் சொல்கிறேன். இங்கு குதிரை பேரம் நடந்ததாக சொல்கின்றனர். அதுபற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து மனம் வருந்துகிறேன் – தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா
10:18 AM, 13 May
விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு பிரேமலதா எதிர்ப்பு
விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கவில்லை.
Tamil Nadu Floor Test LIVE News Updates in Tamil: CM Vijay-led TVK government to prove majority in Assembly today. Follow trust vote, MLAs support count, opposition reactions and latest political developments.