தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்..சம்பளம் ரூ.10,710 உயருகிறதா.. திமுகவின் அதிரடி இதுதான்
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்ட நிலையில், அதுகுறித்து மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்...
ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது.

எனவேதான், தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.
அதில், "அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து இந்த உத்தரவினை 1.4.2023 முதல் செயல்படுத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல்42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இந்த உயர்வால் தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடிகள் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலம் கருதி இந்தக் கூடுதல் நிதியடி அரசு ஒதுக்கீடு செய்யும்" என்று அரசு தெரிவித்திருந்தது.
இவ்வாறாக, தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதனால், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்போதைய அறிவிப்பின்படி 4% அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரக்கூடும்.. அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications