அடுத்தபடியாக வருகிறது 'அம்மா டீ'!!
சென்னை: தமிழ்நாடு அப்படிங்கற பேரை மாத்தி "அம்மா" நாடுனு வச்சாலும் ஆச்சரியப்படுறத்துக்கில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தல்ல ஜெயிச்சு தமிழ்நாட்ல ஆட்சி அமைச்சுது அதிமுக.

குடும்பத் தலைவிகளுக்கு:
அப்போவே, இலவச கிரைண்டர், மிக்ஸி, பேன் அப்டினு இலவசங்களை வாரி இறைச்சது உங்களுக்கெல்லாம் தெரியும்.வீட்டு பொம்பளைங்களுக்கு தேவையான இந்த மூணும்தான் மெயினா அதிமுகவை ஜெயிக்க வச்சுது.

இலவச லேப்டாப் திட்டம்:
அப்புறமா நம்ம பள்ளிக்கூட, காலேஜ் பசங்களுக்கு இலவச மடிக்கணினி , இலவச பஸ் பாஸ், சைக்கிள் அப்படிங்கற பேரில் ஓட்டுப் போடற வயசு வந்த இளந்தாரிகளோட ஓட்டுகளையும் வாங்கி மடில கட்டிக்கிட்டாங்க.

வருங்கால தலைமுறை:
இது பத்தாதுனு வருங்கால ஓட்டுக்கு ஆரம்ப பள்ளி பசங்களுக்கு சிலேட்டில் இருந்து ஜாமெண்ட்ரி பாக்ஸ் வரை கொடுத்தாங்க அம்மா பேரில்.

வீட்டிலும் அம்மா ஆட்சி:
ஒருவழியா ஜெயிச்சு ஆட்சிக்கு வந்ததும் போட்ட திட்டங்கள்தான் இன்னைக்கு ஒவ்வொரு வீட்டிலும் சாப்பாட்டில் இருந்து சமையல் அறை வரை இடம் பிடிச்சுருக்கு.

அம்மா உணவகம்:
மொதல்ல சாப்பாடு.... அம்மா உணவகம் அப்படிங்கற பேரில் எல்லாரும் சாப்டற மாதிரி காலை, மதியம் அப்படினு வயித்துக்கு உணவளிக்க ஆரம்பிச்சாங்க. நின்னுகிட்டே சாப்பிட்டாலும், நிறைவா சாப்பிட்டதா மக்கள் சொல்ல ஆரம்பிச்சாங்க.

அம்மா குடிநீர்:
சரி சாப்பாடு கொடுத்தா போதுமா? அது செரிக்க தண்ணீ வேணும்ல. அதுக்காக வந்ததுதான் அம்மா குடிநீர். ரூபாய் 10 க்கு ஒரு பாட்டில்னு மக்களோட தாகமும் தீர ஆரம்பிச்சுது. பஸ் ஸ்டாண்டிலையே கிடைச்சதால, பயணிகளோட தாகமும் தீர்ந்துச்சு.

அம்மா உப்பு:
அதுக்குப் பின்னாடியே சாப்பாட்டில் போடற உப்பும் அம்மா பேரில் வர ஆரம்பிச்சுது. இப்போ புதுசா "அம்மா டீ" யும் சீக்கிரமா வரப் போறதா பேசிக்கிறாங்க. அதுவும் மலிவு விலைல வந்து மத்த கம்பெனிங்க வயித்தில் புளியைக் கரைக்க போகுதாம்.

தீவிர சிந்தனையில் அமைச்சர்கள்:
இப்போ என்ன பிரச்சனைனா அம்மாகிட்ட நீ மட்டும்தான் பேர் வாங்குவியா, நானும்தான் சாதிப்பேன் அப்படினு ஒவ்வொரு அமைச்சரும் அம்மா பேரில் ஏதாவது ஒன்னை அறிமுகப்படுத்தனும்னு படாதபாடு பட்டுகிட்டு இருக்காங்களாம். அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகளை இதற்காக ஆட்டி வைப்பது தனிக்கதையாம்.

அம்மா மசாலா வருமா? :
இதற்கு நடுவில் அப்படியே மசாலாப் பாக்கெட்டும் அம்மா பேரில் தந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்களாம் மக்கள்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications