மெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி மறுப்பு!: காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கியது
Recommended Video

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரையில் இடம் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் அண்ணாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய திமுக அனுமதி கோரியது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் நேரில் சந்தித்து அனுமதி கோரினர்.

ஆனால், பார்க்கலாம் என்று மட்டும் பதில் தந்து அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந் நிலையில் அந்த இடத்தைத் தர முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மெரீனாவுக்கு பதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கம் அரசு நிலத்தை ஒதுக்க தயாராக இருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மெரீனாவில் அடக்கம் செய்ய பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடத்தை ஒதுக்க முடியவில்லை என்று கிரிஜா தெரிவித்துள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications