தமிழகத்தில் ஆட்சி மாற்றம்... ஆளப்போகுது தேமுதிக - விஜயகாந்த்

தமிழகத்தில் திமுகவும், தொடர்ந்து மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. இதற்கான மாற்றம் விரைவில் வரும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் அதனை தருவது தேமுதிகதான் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் மலைச்சாமி இல்ல திருமண விழாவில் கட்சித்தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் திமுக, அதிமுக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. இதற்கான மாற்றம் விரைவில் வரும். அதனை தருவது தேமுதிக ஆட்சி தான்.

ஏமாறவேண்டாம்

ஏமாறவேண்டாம்

தேர்தல் நேரத்தில் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற வேண்டாம். 5 வருடம் தான் மக்களை திமுக, அதிமுகவினால் மாற்ற முடியும். ஒருநாள் நிச்சயம் தேர்தலின் போது கையில் மை வைத்து மக்கள் அவர்களை ஏமாற்றுவார்கள்.

சிரித்தால் 10ஆயிரம் ரூபாய்

சிரித்தால் 10ஆயிரம் ரூபாய்

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடிபழனிச்சாமியை பார்த்து சிரித்தாலே ரூ 10 ஆயிரம் கொடுப்பார்கள். முதலில் கிணற்றை கொடுக்கச் சொல்லுங்கள். அதன் பிறகு ரூ. 10 ஆயிரம் கொடுக்கட்டும் என்றார்.

பிரேமலதா

பிரேமலதா

விஜயகாந்தை தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக வளர்ச்சியை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. தேமுதிக வளர்ச்சியை யாராலும் முறியடிக்க முடியாது. அதிமுக - திமுக லஞ்சம் பெற்று பணத்தை செலவு செய்கின்றன.

ஆட்சி அமைப்போம்

ஆட்சி அமைப்போம்

எதிர்க்கட்சியாக இருக்கும் போதே நாங்கள் செலவு செய்கிறோம். தமிழகத்தில் வெகு விரைவில் மாற்றம் நடப்பது உறுதி. விஜயகாந்த் ஆட்சி அமைப்பதும் உறுதி. தமிழக அரசியல் நிலைமை கேள்விக்குறியாக மாறி உள்ளது. விரைவில் தமிழகத்தில் தேமுதிக ஆட்சிக்கு வரும்.

மாறாத கொள்கை

மாறாத கொள்கை

ஜெ.தீபா, ஜெயலலிதா வீட்டை தர மறுக்கிறார். எடப்பாடி ஆட்சியை விட மறுக்கிறார். தண்ணீர் எந்த சூழ்நிலையிலும் தன்னை மாற்றிக்கொள்ளாதது. அது போல் கேப்டனும், அவரது தொண்டர்களும் ஒருபோதும் கொள்கையில் இருந்து தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+