Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Online Rummy Ban Bill:அடேங்கப்பா..ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரவையில் இரண்டாவதாக நிறைவேற்றி அனுப்பப்பட்டு இருந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்தனர்.

தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இதனால், ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Tamil Nadu Governor RN Ravi approves online gambling ban bill

ஆன்லைன் சூதாட்டம் : இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவை கொண்டு வந்தது.

இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்து இருந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து இருந்த ஆளுநர், சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார்.

இதனால் சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதற்கு மத்தியில் தமிழக அரசிடம் ஆளுநர், இந்த மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு இருந்தார். ஆளுநர் விளக்கம் கேட்ட 24 மணி நேரத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதற்கான விளக்கத்தை ஆளுநர் மாளிகைக்கு சென்று நேரில் அளித்தார்.

Tamil Nadu Governor RN Ravi approves online gambling ban bill

ஆளுநர் ஒப்புதல்: இதற்கு மத்தியில் அவசரச் சட்டம் கடந்த நவம்பர் 27-ந் தேதியுடன் காலாவதி ஆனது. இதனால் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் தலைதூக்கி இந்த காலகட்டத்தில் தற்கொலைகளும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இந்த மசோதாவை நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு இருந்த ஆளுநர், கடந்த மாதம் 8-ம் தேதி மசோதாவை திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று கூறி மசோதவை திருப்பி அனுப்பியிருந்தார்.

Tamil Nadu Governor RN Ravi approves online gambling ban bill

இதையடுத்து, கடந்த மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை திருப்பி அனுப்ப முடியாது ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தால் அதை நிராகரிப்பதாகத்தான் பொருள் என்று பேசியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளானது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக இன்று தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு இன்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+