2018 அரசு பொது விடுமுறை... தை பொங்கல் ஞாயிறுக்கிழமை வருது... டேக் இட் ஈசி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தை பொங்கல் ஞாயிறு அன்று வருவதால் ஒருநாள் லீவு போச்சே என்று கவலைப்படுகின்றனர் அரசு ஊழியர்கள். 2018ஆம் ஆண்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 4 பண்டிகை நாட்கள் ஞாயிறுகிழமையில் வருகிறது.

ஆண்டுதோறும் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை, தமிழ்நாடு அரசு வெளியிடும். இது முன்கூட்டியே தயாராவதற்கு உதவியாக அமையும். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான விடுமுறை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Nadu govt announces public holidays for 2018

அதன்படி, மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 4 நாட்கள் ஞாயிறுகிழமையில் வருகிறது. மற்றவை வார மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்றுள்ளது.

பண்டிகை விடுமுறை நாட்கள்

01.01.18 - ஆங்கில புத்தாண்டு - திங்கள்
4.01.18 - பொங்கல் - ஞாயிறு
5.01.18 - திருவள்ளுவர் தினம் - திங்கள்
16.01.18 - உழவர் திருநாள் - செவ்வாய்
26.01.18 - குடியரசு தினம் - வெள்ளி
18.03.18- தெலுங்கு வருட பிறப்பு - ஞாயிறு
29.03.18 - மகாவீர் ஜெயந்தி - வியாழன்
30.03.18 - புனித வெள்ளி - வெள்ளி
01.04.18 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) - ஞாயிறு
14.04.18 - தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - சனி
01.05.18 - மே தினம் - செவ்வாய்
15.06.18 - ரம்ஜான் - வெள்ளி
15.08.18 - சுதந்திர தினம் - புதன்
22.08.18 - பக்ரீத் - புதன்
02.09.18 - கிருஷ்ண ஜெயந்தி - ஞாயிறு
13.09.18 - விநாயகர் சதுர்த்தி - வியாழன்
21.09.18 - மொகரம் - வெள்ளி
02.10.18 - காந்தி ஜெயந்தி - செவ்வாய்
18.10.18 - ஆயுத பூஜை - வியாழன்
19.10.18 - விஜயதசமி - வெள்ளி
16.11.18 - தீபாவளி - செவ்வாய்
21.11.18 மிலாது நபி - புதன்கிழமை
25.12.18 - கிறிஸ்துமஸ் - செவ்வாய்

இந்த ஆண்டு 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொங்கல், தெலுங்கு வருடப்பிறப்பு கிருஷ்ணஜெயந்தி ஆகிய பண்டிகை நாட்கள் ஞாயிறு கிழமைகளில் வருகிறது. பண்டிகை நாட்கள் சண்டே வந்தா டேக் இட் ஈசி ஆபிசர்ஸ்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Tamil Nadu government on Wednesday reportedly announced 23 days as public holidays for the calendar year 2018.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற