மெர்சல் படத்திற்கு தமிழக அரசின் ஆதரவு உண்டு.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
மெர்சல் படத்திற்கு தமிழக அரசின் ஆதரவு உண்டு என அமைச்சர் மாஃபா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெர்சல் படத்திற்கு தமிழக அரசின் ஆதரவு உண்டு என அமைச்சர் மாஃபா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்தப் படம் தேசிய அளவில் பேசப்ட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளும் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்தன.

ஏற்கனவே மெர்சல் படத்திற்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மெர்சல் படத்திற்கு தமிழக அரசின் ஆதரவு உண்டு என தெரிவித்துள்ளார்.
மேலும் மெர்சல் பட விவகாரத்தில் தணிக்கை குழு தனது கடமையை முழுமையாக செய்துள்ளது என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications