தமிழக அரசின் காப்பீட்டு திட்டம் விரிவாக்கம்.. 312 புதிய சிகிச்சை முறைகள் சேர்ப்பு
தமிழக அரசின் காப்பிட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில், புதிதாக 312 சிகிச்சை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை: தற்போது நடைமுறையில் உள்ள தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 312 புதிய சிகிச்சை முறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 1.50 லட்சம் ரூபாயை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், தமிழக அரசின் பல்வேறு நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்கும் குறைவாக உள்ள குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications