பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்.. தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பரபர அறிக்கை.. காரணம் இதுதான்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை என்ற பெயரில் ஆண்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த குற்றச்சாட்டில் ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பல்வீர் சிங் விவகாரத்தில் தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்த இவர் மும்பை ஐஐடியில் என்ஜினீயரிங் முடித்தார். கடந்த 2020ல் பணிக்கு சேர்ந்த இவர் அம்பாசமுத்திரத்தில் கடந்த ஆண்டு முதல் பணி செய்து வந்தார்.
இந்நிலையில் தான் அம்பாசமுத்திரம் பகுதியில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அவர் துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விசாரணை என்ற பெயரில் அவர்களை சித்ரவதை செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்
குறிப்பாக பல்வீர் சிங் 10க்கும் அதிகமானவர்களின் பற்களை பிடுங்கி கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலரும் பல்வீர் சிங்கிற்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர். வீடியோ மூலம் அவர் மீது குற்றம்சாட்டினர். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வீர் சிங்கிற்கு எதிராக தமிழகம் முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பணியில் இருந்து சஸ்பெண்ட்
இதையடுத்து உடனடியாக விசாரணை குழு அமைக்கப்பட்டது. மேலும் பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதன் பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம்
இந்நிலையில் தான் பல்வீர் சிங் விவகாரத்தில் தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இன்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சங்கத்தின் தலைவரும் டிஜபிபியுமான அபாஸ் குமார் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அறிக்கையில் இருப்பது என்ன?
பல்வீர் சிங் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையை துவங்கி உள்ளது. 6 வாரத்துக்குள் அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில் தான் பல்வேறு தளங்களில் இயங்கும் மீடியாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் செய்திகள் வெளியிட்டு வருகிறது. மேலும் ஆதாரங்கள், சாட்சிகள் என்ற அடிப்படையில் சமூக ஊடகங்களில் சுயநலமான பிரசாரங்கள் செய்யப்படுகிறது. இத்தகைய செயல்கள் விசாரணையை பாதிக்கலாம். அதோடு இந்த விஷயத்தில் பாராபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனால் விசாரணைக்கு பாதிப்புக்கு ஏற்படாத வகையில் ஊடகங்களில் செயல்பட கேட்டு கொள்கிறேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications