தமிழகத்தில் 10 ஆண்டுகளாக "சரக்கு" உற்பத்தியும் விற்பனையும் எவ்வளவு தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்ன்னை: இந்தியாவிலே மதுபான விற்பனையில் தமிழகம்தான் வரலாறு காணாத வருமானம் ஈட்டி இதர மாநிலங்களுக்கு முன்னோடி(!) மாநிலமாக உருவெடுத்துள்ளது.
ஒடிஷா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருகை தந்து 'மதுபான' சரித்திரத்தை ஆராய்ந்து செல்கின்றனர் அதிகாரிகள். தற்போது கிடைக்கும் வருவாய் போதாதென்று கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக அதிரடியாக மதுபான விலையை உயர்த்தியும் இருக்கிறது தமிழக அரசு.

இதற்கு நேர் எதிராக கேரள அரசோ, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மதுபான உற்பத்தி விவரம்:
- 2001-02 ஆம் ஆண்டில் 13.32 கோடி லிட்டர் மதுவும் 5.06 கோடி லிட்டர் பீரும் உற்பத்தி செய்யப்பட்டது.
- 2002-03 ஆம் ஆண்டில் இது 11.62 கோடி லிட்டர் மற்றும் 4.32 கோடி லிட்டர் (பீர்) என குறைந்தது.
- ஆனால் 2003-04 ஆம் ஆண்டு முதல் மது உற்பத்தியில் அதிரடி ஏறுமுகம்தான். அந்த ஆண்டு 14.04 கோடி லிட்டர் மதுவும் 5.96 லிட்டர் பீரும் உற்பத்தியானது.
- 2005-06ஆம் ஆண்டில் இது அதிரடியாக 19.86 கோடி லிட்டராகவும் 10.62 லிட்டராகவும் அதிகரித்தது.
- 2006ஆம் ஆண்டு முதல் 2008-09 ஆம் ஆண்டு வரை மது உற்பத்தி ஆண்டுக்கு 4 கோடி லிட்டர் அதிகரித்தது. பீர் உற்பத்தியானது 2 கோடி முதல் 3 கோடி லிட்டர் வரை அதிகரித்தது.
- 2008-09ம் ஆண்டு மது உற்பத்தி 31.08 கோடி லிட்டராக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு 2009-10-ல் இது 36.66 கோடி லிட்டராக எகிறியது.
- அதன் பின்னர் 2010-11ஆம் ஆண்டில் உச்ச அளவாக 42.72 கோடி லிட்டர் மது உற்பத்தியானது. பீர் உற்பத்தியோ 19.03 கோடி லிட்டரானது.
- 10 ஆண்டுகால வருவாய் விவரம்:
- -2003-04 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ3,639 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது.
- -2007-08 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து இருந்தது.
- 2007-08ஆம் ஆண்டு மதுபான விற்பனை மூலமான அரசுக்கான வருவாய் ரூ 8,821 கோடியாக இருந்தது.
- 2010-11ஆம் ஆண்டு இந்த வருவாயானது ரூ14, 965 கோடியை எட்டியது.
- -2012-13 ஆம் ஆண்டிலோ உச்சகட்டமான ஆண்டுக்கு ரூ21,680 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications