அமைச்சர் எம்.சி. சம்பத் பயணம் செய்த கார் மீது மணல் லாரி மோதல்... தலையில் படுகாயம்!
கடலூர்: கடலூர் அருகே அமைச்சர் எம்.சி. சம்பத் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில் அவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் நகரசபை தலைவர் தேர்தலில் போட்டியிடும் குமரனை ஆதரித்து தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று கடலூரில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் இரவு 10.30 மணியளவில் பண்ருட்டி திருமலைநகரில் உள்ள அவரது வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

கடலூரை அடுத்த தோட்டப்பட்டு அருகே சென்றபோது, முன்னால் சென்ற மணல் லாரியை கார் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது காரின் பக்கவாட்டில் லாரி திடீரென மோதியது.
அமைச்சர் படுகாயம்
இதனால் நிலைதடுமாறிய கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர வயலுக்குள் இறங்கியது. இதில் காரில் பயணம் செய்த அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கார் டிரைவர் ராஜேந்திரனுக்கும் காலில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர், அமைச்சர் சம்பத் வீடு திரும்பினர்.
இதுபற்றி தகவலறிந்ததும், ஏராளமான அ.தி.மு.க. பிரமுகர்கள் மருத்துவமனை முன் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக லாரி ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications