தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்... ஷூ, செருப்புக்கு தடை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. இந்த தேர்வில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து பிளஸ் 2 மாணவ, மாணவிகளுகள் தேர்வு எழுத 2,427 தேர்வு மையங்களும், 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு குழு அமைப்பு
தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தேர்வு நடைபெறும் அனைத்து பள்ளிகளிலும் சோதனை நடத்துவார்கள்.

மாணவர்களுக்கு கட்டுப்பாடு
ஒவ்வொறு மாவட்டத்திலும் தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள் மற்றும் 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையங்களில் செருப்பு, ஷூ, டை, செல்போன் உள்ளிட்டவைகளை எடுத்து வர அனுமதி கிடையாது.

ஹால் டிக்கெட்
தேர்வு எழுதும் மாணவர்களின் ஆள்மாறாட்டத்தை தடுக்க ஹால் டிக்கெட் , விடைத்தாள் மற்றும் வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம்பெறுகிறது.

புகார்களுக்கு
பொதுமக்களின் கருத்துக்கள், புகார்கள், சந்தேகங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 8012594114, 8012594115, 8012594122, 8012594124 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் .
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications