வெப்பசலனம் காரணமாக தமிழக உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னையில் தீடிர் மழை- வீடியோ
சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் சுட்டெரித்தாலும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications