கொடூரமாகக் கொல்லப்பட்ட பொட்டு சுரேஷ்.. குஷ்பு மீது செருப்பு வீச்சு.. வைகோவை நடு ரோட்டில் சந்தித்த ஜெ
சென்னை: 2013ம் ஆண்டில் தமிழகத்தில் பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல்தான் இருந்தது. ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 மாதங்களும் பற்றியெறிந்தபடிதான் இருந்தன.
குஷ்பு மீது திமுகவினர் நடத்திய செருப்பு வீச்சு, விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை, அதனால் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வுகள்.. என தமிழகமே பரபரத்துக் காணப்பட்டது.
தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களின் இன்னொரு தொகுப்பு இதோ...

கிரானைட் வழக்கில் தயாநிதி விடுதலை
கிரானைட் ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உதயமூர்த்தி மரணம்
உன்னால் முடியும் தம்பி என்ற வாசகத்தை பிரபலமாக்கிய, மக்கள் சக்தி இயக்கத் தலைவர் உதயமூர்த்தி மரணமடைந்தார்.

விஸ்வரூபத்துக்குத் தடை
கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து தமிழக அரசு பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டை விட்டு வெளியேறப் போவதாக கமல்ஹாசன் அதிரடியாக பேட்டி அளித்தார். பெரும் போராட்டம், வழக்குகள், சமரசங்களுக்குப் பின்னர் படம் வெளியானது.

பத்மபூஷன் விருதை நிராகரித்த எஸ்.ஜானகி
தென்னிந்திய கலைஞர்களை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறி தனக்கு அளிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை ஏற்கப் போவதில்லை என்று கூறி பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அதிரடியாக அறிவித்தார்.

போட்டுத் தள்ளப்பட்ட பொட்டு சுரேஷ்
மதுரையில், மு.க.அழகிரி வட்டாரத்தைச் சேர்ந்தவரான பொட்டு சுரேஷ் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

குஷ்பு மீது செருப்பு வீச்சு
திருச்சிக்கு வந்த நடிகை குஷ்பு மீது திமுகவினரே செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் குறித்து அவர் தெரிவித்து கருத்துக்களால் இந்தப் போராட்டம் நடந்தது. சென்னையில் உள்ள குஷ்பு வீடு மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

வைகோவை நடு ரோட்டில் சந்தித்த ஜெயலலிதா
மது விலக்கை அமல்படுத்தக் கோரி பாதயாத்திரை மேற்கொண்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, முதல்வர் ஜெயலலிதா, சிறுதாவூர் அருகே ரோட்டில் வைத்து சந்தித்துப் பேசினார். வைகோவிடம் நலம் விசாரித்த அவர் பரிவுடன் பேசியது அரசியல் நாகரீகத்தை வெளிக்காட்டுவதாக அமைந்தது.

வினோதினி மரணம்
ஒரு தலையாக காதலித்த நபரால், ஆசிட் வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடி வந்த வினோதினி, சென்னை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

யுவராஜ் நீக்கம்
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த யுவராஜ் திடீரென நீக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் கிளம்பியதால் அவர் நீக்கப்பட்டார். இவர் ஜி.கே.வாசன் ஆதரவாளர் ஆவார்.

தமிழகத்தை உலுக்கிய மாணவர் போராட்டம்
தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் பிரச்சினையில் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்தது. இதையடுத்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் மாநில அரசு விடுமுறை அறிவித்தது.

மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியது விடுதலைச் சிறுத்தைகள்
திமுகவைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

சட்டசபையில் அடிதடியில் குதித்த தேமுதிக எம்.எல்.ஏக்கள்
தமிழக சட்டசபையில் அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகனை சரமாரியாக தாக்கினர் தேமுதிக எம்.எல்.ஏக்கள். இதையடுத்து பார்த்தசாரதி, முருகேசன், நல்லதம்பி, வி.சி.சந்திரசேகர், செந்தில்குமார், அருள் செல்வன் ஆகியோர் ஒரு ஆண்டு இடை நீக்கம் செய்ய்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். பின்னர் இது 6 மாதமாக குறைக்கப்பட்டது.

ஜெயலலிதா எச்சரிக்கை.. ஐபிஎல்லிலிருந்து சிங்கள வீரர்கள் நீக்கம்
தமிழகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிங்கள வீரர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

மறைந்தார் சுகுமாரி
பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணமடைந்தார். 2000 படங்களுக்கு மேல் நடித்த பெருமை கொண்டவர் சுகுமாரி.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications