தாறுமாறாக எகிறிய வாக்குப்பதிவு.. 33 மாவட்டங்களில் 80%+.. மிகக்குறைவான வாக்கு சதவீதம் எங்கே தெரியுமா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்ட தகவல்களின்படி 33 மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 85.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இறுதி நிலவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

அனைத்து மாவட்டங்களிலுமே வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. கரூர், தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் 90%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 33 மாவட்டங்களில் 80%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. 5 மாவட்டங்களில் மட்டுமே 80 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
80%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவான மாவட்டங்கள்
கரூர் - 92.64%
சேலம் - 90.73%
தருமபுரி - 90.14%
நாமக்கல் - 90.13%
ஈரோடு - 90.10%
ராணிப்பேட்டை - 89.869%
திருவண்ணாமலை - 89.46%
விழுப்புரம் - 88.99%
திருப்பத்தூர் - 88.96%
திண்டுக்கல் - 89.06%
வேலூர் - 88.76%
திருப்பூர் - 88.59%
கள்ளக்குறிச்சி - 88.25%
அரியலூர் - 87.40%
காஞ்சிபுரம் - 87.39%
நாகை - 86.30%
பெரம்பலூர் - 85.50%
கடலூர் - 85.49%
திருச்சி - 85.44%
கிருஷ்ணகிரி - 85.29%
செங்கல்பட்டு - 85.29%
விருதுநகர் - 84.90%
கோவை - 84.79%
புதுக்கோட்டை - 83.89%
திருவாரூர் - 83.77%
திருவள்ளூர் - 83.76%
சென்னை - 83.73%
தென்காசி - 82.40%
மயிலாடுதுறை - 82.14%
தேனி - 81.92%
தஞ்சாவூர் - 80.61%
மதுரை - 80.55%
தூத்துக்குடி - 80.55%
குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ள மாவட்டங்கள்
நீலகிரி - 78.95%
திருநெல்வேலி - 77.93%
ராமநாதபுரம் - 77.03%
சிவகங்கை - 76.65%
கன்னியாகுமரி - 75.61%
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications