தமிழக சட்டசபை 23 ந்தேதி கூடுகிறது?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் வரும் 23-ந் தேதி கூடும் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும். இதில் ஆளுநர் உரையாற்றுவார். இந்த ஆண்டுக்கான சட்ட சபையின் முதல் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த கூட்டத் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்கும் என்று தெரிகிறது. தமிழக ஆளுநர் ரோசய்யா உரையாற்றி தொடங்கிவைக்கிறார். அப்போது தமிழக அரசின் புதிய திட்டங்களையும், கொள்கை களையும், சாதனைகளையும் எடுத்துக் கூறுகிறார். கவர் னர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிரபார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications