'ஐஸ்வர்யா ராஜேஷ் மீது ஆக்சன் எடுங்க'.. ஃபர்ஹானா படத்துக்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கடும் எதிர்ப்பு
ராமநாதபுரம்: புர்கா திரைப்படத்தின் இயக்குநர் சர்ஜுன், நடிகர் கலையரசன், நடிகை மிர்னா, பர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், நடிகர் செல்வராகவன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீது தமிழக காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், 'ஃபர்ஹானா படத்தைத் திரையிடாமல் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தவ்ஹித் ஜமாத் தலைவர் இப்ராஹிம் சபீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்து அவற்றை திரையிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தமிழகக் காவல்துறை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட 'புர்கா' என்ற திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களைத் திரையிட்டு, உண்மைக்கு மாறான கருத்துகளை இஸ்லாம் சொல்வதுபோல் புர்கா படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
புர்கா திரைப்படத்தை தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அடுத்து 'ஃபர்ஹானா' என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் விதமாக இதில் வசனங்கள் வருகின்றன. மேலும் இந்த இரண்டு படங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையும் கொச்சைப்படுத்தப்படுகிறது.

புர்கா திரைப்படத்தின் இயக்குநர் சர்ஜுன், நடிகர் கலையரசன், நடிகை மிர்னா, பர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், நடிகர் செல்வராகவன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீது தமிழக காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், 'ஃபர்ஹானா படத்தைத் திரையிடாமல் தடுக்க வேண்டும் " இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications