ஹிந்திக்கு போட்டியாக டிவிட்டரை அதிர வைத்த #தமிழ்வாழ்க கோஷம்! நெட்டிசன்கள் அசத்தல்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவிட்டரில் முதல் முறையாக தமிழிலில் டிரெண்ட் செய்து அசத்தியுள்ளனர் தமிழ் 'நெட்டிசன்கள்'. அகில இந்திய அளவில் முதல் இடத்தில் 'தமிழ்வாழ்க' என்ற ஹேஸ்டேக் இருப்பதை பார்த்து இந்தியாவின் பல மொழி பேசும் மக்களும் அது என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

நாட்டில் பரபரப்பாக நடைபெறும் ஒரு விவகாரத்தை அதிகமானோர் டிவிட்டரில் கலந்துரையாடும்போது அது தேசிய அளவிலான டிரெண்ட் ஆகமாறுவது வழக்கம். வட இந்தியாவில் நரேந்திரமோடி, கேஜ்ரிவால் போன்றோரின் அபிமானிகள் ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்ட் செய்து நாட்டிலுள்ள நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வந்தனர்.

தென் இந்தியாவை பொருத்தளவில் நம்மைவிட ஆந்திராவும், கர்நாடகாவும் மக்கள் தொகையில் பெருத்திருந்தாலும், டிவிட்டர் பயன்பாட்டில் அவர்கள் பின்தங்கியே உள்ளனர். அம்மாநிலத்தவர்கள் பேஸ்புக்கை விட்டு இன்னும் வெளியேவரவில்லை என்று தெரிகிறது. ஆனால் தமிழர்கள் டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவருகின்றனர்.

பல நேரங்களில் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் ரசிகர்கள்தான் தங்களது அபிமான நடிகர்களுக்காக ஹேஸ்டேக் உருவாக்கி சண்டையிட்டுவருவர். சில நேரங்களில் மீத்தேன் வாயு எதிர்ப்பு போன்ற நல்ல விஷயங்களுக்காகவும் டிவிட்டரில் தமிழர்கள் டிரெண்ட் செய்துள்ளனர். ஆனால் அந்த ஹேஸ்டேக்குகள் அனைத்துமே ஆங்கிலத்தில்தான் இருக்கும். முதல்முறையாக, நேற்று தமிழ் டிவிட்டர்வாசிகள் தமிழிலில் டிரெண்ட் செய்தனர்.

முதல் ஹேஸ்டேக்கே பொருள் பொதிந்ததாக இருந்தது. ஆம் #தமிழ்வாழ்க என்பதுதான் அந்த ஹேஸ்டேக். நேற்று இரவிலேயே இதை இந்திய அளவில் முதல் இடத்துக்கும் கொண்டுவந்தனர். வட இந்தியர்களும், பிற மாநிலத்தவர்களும் அதை வாசிக்க முடியாமல், டிவிட் செய்த தமிழர்களிடமே விளக்கம் கேட்டு அறிந்து கொண்டனர். தமிழர்களும், ஆங்கிலத்தில் அதற்கு பொருள் விளக்கிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தனர்.

ஹிந்தி மொழியில் நேற்று வடமாநிலத்து நெட்டிசன்கள் சிவராத்திரி வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதைப்பார்த்ததும்தான், நம்மவர்களுக்கு தமிழ் பாசம் பீறிட்டது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி

பிரபலங்கள் இந்த ஹேஸ்டேக்கில் டிவிட் செய்தால் மதிப்பு அதிகம் என்பதால், சினிமா நடிகர்களை மென்சன் போட்டு பலரும் கேட்டுக் கொண்டனர். அரசியல் தலைவர்களையும் கேட்டுக் கொண்டனர். அதில் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்தது திமுக தலைவர் கருணாநிதிதான். தனது டிவிட்டில், உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. என்று கூறி கடைசியாக #தமிழ்வாழ்க என்று ஹேஸ்டேக் போட்டார். இதை இன்று காலை வரை 300க்கும் அதிகமானோர் ரீடிவிட் செய்தனர். தனுஷ் உள்ளிட்ட சினிமா நடிகர்களை நேற்றிரவு முதலே தமிழ்வாழ்க என்ற ஹேஸ்டேக் போடுமாறு நெட்டிசன்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அநேகன் தொடர்பான டிவிட்டுகளை வெளியிட்டுவரும் தனுஷ் இன்று காலைவரை இதுகுறித்து மூச்விடவில்லை. இதேபோலத்தான் பல சினிமா கலைஞர்களும் பதில் தரவில்லை.

அன்பழகன்

திமுகவின் மற்றொரு பிரபலமான ஜே.அன்பழகன், கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் இருந்த மூத்த மொழி தமிழ் மொழி, அத் தமிழ் செம் மொழியானது .தமிழ் வாழ்க ! செம்மொழி வாழ்க ! என்று குறிப்பிட்டு #தமிழ்வாழ்க என்று ஹேஸ்டேக் போட்டுள்ளார். தனது மற்றொரு டிவிட்டில் இத்தகைய சிறப்புமிக்க தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது திமுக தலைவர் கருணாநிதிதான் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பெயரிலும், உயிரிலும் கலந்த மொழி

இது ஒரு நல்ல சிந்தனை. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று எந்த மனிதர்களுக்காவது பெயர் சூட்டியுள்ளனரா? தமிழ் என்ற மொழியை தனது பெயராகவும் சூட்டிக் கொண்ட இனம் தமிழினம் மட்டுமே என்பதை இந்த டிவிட் குறிக்கிறது.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசன் பாடல்வரிகளை நச் என்று எடுத்துப்போட்டு கருத்து சொல்லியுள்ளார் கருத்துகந்தன். டைமிங்.. டைமிங்..

வள்ளுவரை தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

சினிமா விமர்சகர் பிரசாந்த்தின் கருத்து இது. தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கே தாய் மொழி தமிழ்தானுங்களே..

ஹிந்தியை திணிக்க முடியாது

ஹிந்தியில் டிவிட் ஒன்று டிரெண்ட் ஆகுவதை பார்த்ததும், தமிழன் தமிழில் டிரெண்ட் செய்ய தொடங்கியதை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தோடு இக்கால நெட்டிசன்கள் போராட்டத்தை ஒப்பிட்டுள்ளார் இந்த ஆழ்வார்க்கடியான். 'பொன்னியின் செல்வன்' கதாப்பாத்திரமான ஆழ்வார்க்கடியானை பெயரளவில் மட்டுமின்றி சிந்தனையிலும் இணைத்துக் கொண்டார் போலும்.

கிண்டலும் தமிழர் சொத்துதான்

சிலர் தமிழ் பாசம் வைத்துள்ளதே, வேறு எந்த மொழியும் தெரியாததால்தான் என்று இளநியை சீவுவதுபோல நைசாக சிலரை சீண்டி பார்த்துள்ளார் இந்த இளநி வியாபாரி.

இதேபோல மேலும் பல டிவிட்டர்வாசிகளும், கருத்துகளையும், தஞ்சாவூர் பெரிய கோயில், பழந்தமிழ் கல்வெட்டுகள் போன்றவற்றை பகிர்ந்து தங்கள் தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நீங்களும் ஒரு ரவுண்ட் போய் பார்த்து பகிருங்களேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+