திமுக, அதிமுகவுக்கு போட்டியாக சமூக வலைத்தளத்தில் மக்கள் நல கூட்டணி விஸ்வரூபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலின்போது, மக்கள் நல கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் விதமாக, பல்வேறு காரணங்களை முன் வைத்து #ThisTime4MNK என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் செய்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர் என்பதை இந்த டிரெண்ட் காட்டுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிவிட்டர் டிரெண்ட் முழுக்க தமிழக அரசியல் கட்சிகளின் பிரச்சாரமே ஆக்கிரமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மக்கள் நல கூட்டணி ஆதரவு ஹேஷ்டேக் இன்று காலை முதல் மதியம் வரை தொடர்ச்சியாக டிரெண்டிங்கில் உள்ளது. இதில் வெளியாகியுள்ள சில டிவிட்டுகளை பாருங்கள்.

ஆதலால் வாக்களிப்பீர்

தமிழகத்தின் குறைகளின் பட்டியலை போட்டு, இதனால் மக்கள் நல கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்கிறது இந்த டிவிட்.

சொத்து ஏலம்

ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து பொது மக்களிடம் ஏலம் விடப்படும் என வைகோ கூறியுள்ளார். இதை பார்க்கவாவது ஓட்டு போட வேண்டும் என்கிறது இந்த டிவிட்.

வெள்ள சேதம்

எதாச்சும் ஒரு பிரச்னை வந்தா உடனே ஓடி வர்றவங்களை ஆதரிப்போம், என்று வெள்ள பாதிப்பு நிகழ்வுகளை பற்றி கூறுகிறது இந்த டிவிட்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவை. சமீபகாலமாகத்தான் பாமக, திமுக அதன்பிறகு அதிமுக இந்த வலைத்தளங்களில் கால் வைத்தன. இப்போது மக்கள் நல கூட்டணியும் டிவிட்டரில் டிரெண்ட் செய்யும் அளவுக்கு சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது. சமூக வலைத்தளத்திலும், திமுக, அதிமுக, பாமகவுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+