திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? - வைரமுத்து காட்டம் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? அவர் தமிழர்! தமிழின் ஞான அடையாளம்! ஒருவேளை அவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு அது பெருமைதான் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tamil poet Vairamuthu Condemned to Insulting of Thiruvalluvar Statue

ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது. மேலும் திருவள்ளுவரை தலித் என்று கூறிய சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் அனைவரும் திருவள்ளுவர் சிலை நிறுவும் விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ''திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? அவர் தமிழர்! தமிழின் ஞான அடையாளம்! ஒருவேளை அவர் தலித் என்பது உண்மையானால் தமிழருக்கு சிறுமையல்ல தமிழருக்கு அது பெருமைதான்.

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தமிழர் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சிலை அவமதிப்பு விவகாரத்தில் உத்தராகண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழறிஞர், தமிழ் அமைப்புகள் இணைந்து சிலையை மீட்டெடுக்கும்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+