கலகலன்னு சிரிங்க.. கவலையில்லாம வேலையைப் பாருங்க...!

Subscribe to Oneindia Tamil

என்னது... திருநெல்வேலியில ஸ்கூல் டீச்சர் ஓடிப்போயிருச்சா....? என்று கேட்டு அதை தேடி முடிப்பதற்குள் திண்டுக்கல்லில் டுடேரியல் டீச்சர் எஸ்கேப் ஆகிருச்சாமே என்று அடிக்கிறார்கள் இந்த நெட்டிசன்கள்.

கலைஞர் முதல்... விஜயகாந்த் வரை.... கவுரியின் இரு காதலர்கள் வரை எல்லாவற்றையும் அடித்து கிழித்து தோராணம் கட்டி தொங்க விடுகின்றனர்.

இடை இடையே தத்துவம் வேறு... மனசெல்லாம் பாரமாக இருந்தால் கொஞ்சம் ட்விட்டர் பக்கம் போய் வாருங்கள்.... படிச்சு படிச்சு... சிரிச்சு சிரிச்சு.... ஸ்டிரஸ் ஓடிப் போயிரும்ல...!

அடிக்கடி அவங்க உதிர்க்கிற தத்துவ முத்து இருக்கு பாருங்க.. ஏ கிளாஸ்... சான்ஸே இல்லைன்னு சொல்லத்தோணும்... நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகமே... என்கிற ரீதியில் நெட்டிசன்களின் தத்துவ முத்துக்களை உங்களுக்குத் தருகிறோம்... படிங்க... சிரிச்சு வயிறு வலிச்சா தட்ஸ் தமிழ் அதுக்கு பொறுப்பேற்காது...

டிமிட்ரி இவ்நோஸ்கி

ஆண்களில் லட்சுமிமேனன் ரசிகர்களும் பெண்களில் சல்மான் துல்கர் ரசிகைகளும் ஒரே ரகம்.

ஆல்தோட்டபூபதி ‏@thoatta

1985 - நல்ல காதல்கள் தோற்பதில்லை 2015 - நல்ல காதல்கள் வாட்ஸ்ஸப் வருவதில்லை

ஆல்தோட்டபூபதி ‏@thoatta

கனவுல அப்பாவோட ஹெலிகாப்டர் சிக்ஸ பாத்திருக்கும் போல :-))) தோனி டார்லிங் via @partheespeaks

ஆல்தோட்டபூபதி ‏@thoatta

அட்சய திருதியை அன்னைக்கு வாங்குற ஒன்னு, வருஷம் முழுக்க தொடருதுன்னா, அது வீட்ல வாங்குற திட்டு மட்டுந்தான்

தாமிரபரணி © ‏@iBalazi

சின்ன வயசில சில்லரை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம், இப்ப சில்லரை இல்லைனா சாக்லேட் திங்க வேண்டியதா இருக்கு:-/

ரயில் கணேசன் ‏@Railganesan

எனக்கு பஞ்சாப் டீம்ல புடிச்சதே 2 பேர்தான் 1. ப்ரீத்தி இன்னொன்னு... அதுவும் ப்ரீத்திதான்

ராஸ்கோலு ‏@RazKoLu

இதைத்தான் வடிவேலு அன்றே சொன்னார் "பஸ் டிக்கெட் வெல ரெண்டு ரூபா, பூ வெல 50ரூ நல்லார்க்குடா நியாயம்" #ப்ளாட்பார்ம் டிக்கெட் 10ரூ

தாயுமானவன் ‏@shyamthayu

நின்னைச் சரண் அடைந்தேன் கண்ணம்மா....இளையராஜா குரலில் கேட்கையில் ஏதோ செய்கிறது. பாவம் பாரதிக்கு கொடுத்து வைக்கவில்லை

சௌம்யா ‏@arattaigirl

விஷம் தோய்த்த கத்தியில் காய்கறி நறுக்கி சுவையாய் சமைத்து உண்டு சாவதுதான்.... காதல். டைரக்டா விஷத்தை குடிச்சா.... கல்யாணம்.

சௌம்யா ‏@arattaigirl

நானும் தீயா வேலை செய்யணும்னுதான் பாக்கறேன். ஆபிஸ் பத்தி எரிஞ்சிடுமேனுதான் அடக்கி வாசிக்கறேன் #மீள்

சால்ட்&பெப்பர் தளபதி ‏@thalabathe

நட்பில் இதற்குமேல் நெருங்கிச் செல்ல முடியாதா என ஏங்கிடும் தருணத்தில் காதலைச் சொல்லிடனும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+