விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்பதா? குஷ்பு வீடு நாளை முற்றுகை
சென்னை: அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு கருத்து கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை குஷ்பு வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழர் முன்னேற்றப்படை அறிவித்துள்ளது. இந்த கருத்தை தமிழகத்தில் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருசில நாட்களில் மறந்துவிட்டனர்.

ஆனால் வெளிநாட்டு தமிழர்கள் மறக்க தயாராக இல்லையாம். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக ரகசியமாக அதிரடி வேலை ஒன்றை செய்து வருகின்றனராம். குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கி வரும் 'ஆம்பள' படத்தை தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ரிலீஸ் செய்ய விடக்கூடாது என்றும் அதையும் மீறி ரிலீஸ் செய்தால் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
குஷ்புவின் இந்த தேவையில்லாத சர்ச்சை பேச்சால் சுந்தர் சி மற்றும் விஷாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் என்ற முறையில் விஷால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது இப்படி இருக்க, தமிழகத்தில் குஷ்புவிற்கு எதிராக களம் இறங்கியுள்ளனர் தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர். நடிகை குஷ்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூறியதை கண்டிக்கும் விதமாக நாளை வியாழக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு பட்டிணபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லீத் கேஸ்டல் சாலையில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை தமிழர் முன்னேற்றப் படையினர் அதன் தலைவர் கி.வீரலட்சுமி தலைமையில் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications