சிம்புவுக்கு ஆதரவாக தற்கொலைப்படையாவேன்.... டி.ஆர்.ரை சந்தித்த பின் 'சர்ச்சை' வீரலட்சுமி மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக தற்கொலைப்படையாக மாறுவேன் என்று தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த கி.வீரலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் தலைவியாக இருப்பவர் வீரலட்சுமி. தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் தொடங்கி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எமி ஜாக்சன் உருவப் பொம்மையை எரித்தது வரை அவ்வப்போது ஏதாவது பரபரப்பு கிளப்புபவர் வீரலட்சுமி.

தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் இவர் சமீபத்தில் விஷாலின் மீது பாயாத வன்கொடுமைச்சட்டம் சிம்பு மீது பாய்வது ஏன்? என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

நான் பேசுபவள் அல்ல.செயல் வீரர்.என் உயிரினும் மேலான நமது இனத்தின் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரனார் அவர்களை உள்ளார்ந்து...

Posted by கி.வீரலட்சுமி கி.வீரலட்சுமி on Saturday, December 26, 2015

இந்நிலையில் இன்று "நான் பேசுபவள் அல்ல,செயல் வீரர்.என் உயிரினும் மேலான நமது இனத்தின் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரனார் அவர்களை உள்ளார்ந்து நேசித்தவரும்,தமிழர் மண்,தமிழர்மொழி,தமிழர்களை அரவனைக்கும் அண்ணன் டி..ராஜேந்திரன் அவர்களின் குடும்பத்தை பாதுகாக்க நான் தற்கொலை படையாக மாறக்கூட தயாராக உள்ளேன்.

தமிழனாக இருந்தால் என் பின்னால் வந்து நில்லுங்கள்.என் இனத்தின் எதிராக இருந்தால் என் முன்னால் வந்து நில்லுங்கள்.இறப்பும் பிறப்பும் ஒரு முறை தான்.எம் இனத்தை பாதுகாக்க எம் உயிர் போகட்டும்.

உறவுகளே!இன்று தான் என் வாழ்நாளில் முதல் முறையாக அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் அவர்களை பாத்ததும்,பேசியதும்". என்று நடிகர் சிம்புவிற்கு ஆதரவாக அறிக்கை விடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் போராட்டம் நடத்துவதாகக் கூறி பலரிடமும் வீரலட்சுமி பணம் பறிக்கிறார்.அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று தமிழ் ராஜேந்திரன் என்ற வக்கீல் தெரிவித்து இருந்தார்.

தனது சொத்துக்களை விற்றுதான் போராட்டங்கள் நடத்துவதாக வீரலட்சுமி சமீபத்தில் கூறியிருந்த நிலையில், அவர் மீது பண மோசடி குற்றச்சாட்டு மோசடிகள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+