ரசிகர்கள் சந்திப்புக்கு முன்பாக திடீரென தமிழருவி மணியனுடன் ரஜினி ஆலோசனை! அரசியல் திட்டம் ரெடி?
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துடன் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த்தின் சென்னை போயஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று மதியம் நடைபெற்றது.
ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

போர் வரும்போது
ஏற்கனவே போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்த ரஜினி மீண்டும், தனது ரசிகர்களை சந்திக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களுக்கு கட்டளை
ரசிகர்கள் தனது தோள் மீது கை போடக்கூடாது, சால்வை அணிவிக்க கூடாது என ரஜினி சார்பில் ரசிகர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி ஜரூராக ரெடியாகி வரும் நிலையில், இன்று சுமார் 20 நிமிடங்கள் தமிழருவி மணியன் சந்தித்தார்.

மாநாடு நடத்தினார்
தமிழருவி மணியன் ரஜினியின் அறிவிக்கப்படாத அரசியல் கொ.ப.செ போல செயல்பட்டு வருகிறார். ரஜினி ரசிகர்களை கூட்டி மாநாடு நடத்தி அதிர வைத்தவர் இவர். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து கூறி வருபவர். இந்த நிலையில், ரசிகர்கள் சந்திப்புக்கு முன்பாக இவர் ரஜினியை சந்தித்துள்ளதால் அரசியல் குறித்துதான் இருவரும் விவாதித்திருக்க வேண்டும் என தெரிகிறது.

புதுக்கட்சி அறிவிப்பு
ரஜினி தனது ரசிகர்களுடான சந்திப்பில் அரசியல் கட்சி பற்றி அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?











Click it and Unblock the Notifications