ஸ்டாலின் 65வது பிறந்தநாள் ... போட்டி போட்டு வாழ்த்திய பாஜக தமிழிசை, காங். திருநாவுக்கரசர்!
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாளையொட்டி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை: தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாளையொட்டி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாள் இன்று கொண்டாப்பட்டது. தம்முடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.

பின்னர் அண்ணா மற்றும் பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதைசெலுத்தினார். மேலும் திமுக நிர்வாகிகளும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ட்விட்டரில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில் தங்களுக்கு ஆரோக்கியமும்நீண்ட ஆயுளும் நான் வணங்கும் ஆண்டவனை வேண்டி தங்களின் அரசியல் பணி தொடர மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று புதுக்கோட்டையிலிருந்து தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications