ஜெ.மீது ஊழல் சாயம் வரக்கூடிய அளவுக்கு துணை புரிந்து விட்டார் சசிகலா - தமிழிசை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்தல் நடப்பதே நலமாக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஈரோடு: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது ஊழல் சாயம் வரக்கூடிய அளவுக்கு சசிகலா துணை புரிந்து விட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். நல்ல நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகம் நடக்கவே தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலை ஏற்படவில்லையென்றால் தேர்தலை சந்திப்பது நலமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: தமிழ்நாட்டில் இப்போது ஆரோக்கியமற்ற சூழ்நிலை உள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தமிழகம் வெளியே வர வேண்டும். நல்ல நிர்வாகம் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும். ஊழல் செய்த பணத்தை வைத்து சிலர் ஆட்சிக்கு வர முயல்வது முற்றிலும் தவறானது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா சினிமா நட்சத்திரமாக இருந்து அபரிதமான சொத்துக்களை சேர்த்தார். எனவே ஊழல் செய்து பணம் சம்பாதிக்க அவசியம் அவருக்கு இல்லை. ஜெயலிலதா மீது ஊழல் சாயம் வரக்கூடிய அளவுக்கு சசிகலா துணை புரிந்து விட்டார். நல்ல நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகம் நடக்கவே தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலை ஏற்படவில்லையென்றால் தேர்தலை சந்திப்பது நலமாக இருக்கும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications