ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மாறுவேடத்தில் ஸ்கூட்டரில் பயணம்... தமிழிசை புகார்
ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மாறுவேடத்தில் ஸ்கூட்டரில் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பயணம் செய்கின்றனர் என்று பாஜக தேசிய தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை : ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மாறுவேடத்தில் ஸ்கூட்டரில் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பயணம் செய்வதாக பாஜக தேசிய தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகார் கூறினார்.
ஆர்.கே.நகரில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகாரினால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் மீண்டும் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சனிக்கிழமை சாலை மறியலில் வேட்பாளர் கரு.நாகராஜனுடன் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆர்.கே.நகரில் பண நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவுக்கு புறம்பாக பூத் சிலிப்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காதென்றால் அதை நடத்துவதில் பயனில்லை.
அமைச்சர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் பயணம் செய்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications