தேமுதிக வராத கோபத்தையெல்லாம் திருமாவளவன் மீது கொட்டித் தீர்க்கும் தமிழிசை!
சென்னை: பாஜக கூட்டணிக்கு தேமுதிக வராத கோபத்தையெல்லாம் வைகோ மீதும், திருமாவளவன் மீதும், இடதுசாரிகள் மீதும் பாஜக தலைவர்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் தேச விரோத சக்திகளுக்கு திருமாவளவன் துணை போகிறார். இதனால் தேச பக்தர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர் என்றும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை ரொம்பக் கோவமாக அறிக்கை விட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மக்கள் நல கூட்டணி வழக்கறிஞர்கள் மாநாட்டில் தேச துரோக குற்றச்சாட்டு பிரிவை இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய திருமாவளவனின் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு குரல், தேச பக்தர்களுக்கு கவலை அளிக்கிறது.

மக்கள் நல கூட்டணி என்ற போர்வையில் தேச விரோதம் என்ற விஷத்தை தமிழகத்தில் தேர்தல் களத்தில் தூவ முயல்வது ஆபத்தானது. அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தையே தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக திருத்த சொல்லும் திருமாவளவனை கண்டிக்கும் திராணி கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் இருக்கிறதா?
டெல்லி, ஹைதராபாத் பல்கலைக்கழகங்களில் தேச விரோத குரல்கள் ஒலித்த போது அதை கண்டிக்காமல் அதனை ஒரு சாதிய ஆதரவு குரல் கொடுத்த திருமாவளவன் மற்றும் இடதுசாரி தலைவர்கள் இணைந்த மக்கள் நல கூட்டணி கருத்தாக திருமாவளவன் பேச்சை எடுத்துக்கொள்ளலாமா?
தேச விரோத கருத்துக்களை சாதிய சாயம் பூசி, மோடி அரசுக்கு எதிராக திசை திருப்பும் திருமாவளவன் இடதுசாரிகள் கூட்டணிதான் மக்கள் நல கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இதனால் மக்கள் நல கூட்டணி தமிழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த உதவுமே தவிர மக்களின் நலம் காக்க உதவாது என்பதனை திருமாவளவன், வைகோ போன்றவர்களின் சமீபகால பேச்சுக்களும், நடவடிக்கைகளும் உணர்த்துகின்றது என்று கூறியுள்ளார் தமிழிசை.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications